Take a fresh look at your lifestyle.

நடிகருக்கு சவால் தேவை: அருண் விஜய்

159

நடிகருக்கு சவால் தேவை: அருண் விஜய்
கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், அருண் விஜய் நடித்துள்ள படம் ‘ரெட்ட தல’. இதில் சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் ஹீரோயின் ஆக நடித்துள்ளனர்.சாம் சி.எஸ். இசை அமைத்துள்ள இந்த படத்தை பிடிஜி நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் தயாரித்துள்ளார்.கிறிஸ்துமஸ் பண்டிகை யையொட்டி வரும் 23-ந்தேதி ரிலீஸ் ஆக உள்ளது.இதையொட்டி நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அருண் விஜய் பேசியது, ‘ரெட்ட தல’ படம் கிட்டதட்ட 1¼ வருட உழைப்பு. ‘வணங்கான்’ படத்திற்கு பிறகு முற்றிலும் வேறு மாதிரி கேரக்டர் பண்ண வேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் இயக்குனர் திரு இந்த கதையை எடுத்து வந்தார்.கேட்டவுடன் பிடித்து விட்டது. இந்த படத்தை பொருத்தவரை அடுத்து என்ன? என்ற எதிர்பார்ப்பு படம் முழுவதும் இருந்துக் கொண்டே இருக்கும். ஒரு நடிகருக்கு எப்பவுமே ஒரு சவால் தேவை. அது இந்த படத்தில் இருந்தது என்றார்.