ஜீவாவுக்கு ஜோடியான இவானா
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த, லவ் டுடே படம் மூலம் பிரபலமானவர் நடிகை இவானா, அதன் பிறகு டிராகன் படத்திலும் கேமியோ ரோலில் நடித்தார். அதோடு தெலுங்கில் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஸ்ரீ விஷ்ணு உடன் இணைந்து சிங்கிள் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இயக்குனர் ராஜேஷ் இயக்கி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்(ஜியோ)’ என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சிவா மனசுல சக்தி (எஸ் எம் எஸ்) பட ஸ்டைலில் காமெடி மற்றும் லவ் கலந்து இந்த ஜியோ படத்தை ராஜேஷ் எடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவானா பிறந்தநாளை முன்னிட்டு ஷூட்டிங்கில் இவானாவுடன் பட குழுவினர் கேக் வெட்டு கொண்டாடினார். அதோடு பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்ரும் வெளியிட்டனர்.
Next Post