Take a fresh look at your lifestyle.

‘காதல் ரீசெட் ரிபீட்’ பட டிரெய்லர்‌ ரிலீஸ்

79

‘காதல் ரீசெட் ரிபீட்’ பட டிரெய்லர்‌ ரிலீஸ்
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியாக நடித்துள்ளனர், மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன் முக்கிய கேரக்டரில் நடிக்க, இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ், டி-ஸ்டுடியோஸ் மற்றும் டென்வி புரொடக்ஷன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.சமீபத்தில் வெளியான டீசரும், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், புதுமையான களத்தில் உருவாகியுள்ள வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இருக்குமென்பதை உறுதிப்படுத்துகிறது.