Take a fresh look at your lifestyle.

தூய்மைப் பணியாளர் பத்மா என்ற சகோதரிக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இது

97

குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்காக தூய்மைப் பணியாளர் பத்மா என்ற சகோதரிக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இது.சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பத்மா (ஜனவரி 11) சென்னை, தியாகராய நகர், வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததை பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, பரிசுத்தொகையாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை முதல்வர் மு.க. ஸ்டாலின் (ஜன. 12) தலைமைச் செயலகத்தில் வழங்கினார். இந்த நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையை பாராட்டி, அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையாக போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு சலானி ஜூவல்லரி சார்பில் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.