ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தை தொடங்கி வைத்த கல்வி அமைச்சர்
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இயக்குகிறார்.இப்படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். இதற்கு முன்பு அமைச்சர் ராஜ் மோகன் இயக்கிய முதல் படமான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்திருந்து குறிப்பிடத்தக்கது.மேலும், இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Prev Post
Next Post