Take a fresh look at your lifestyle.

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம்

2

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம்
சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இதில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது. விஜய் எம்.பி. புதிதாகத் தொடங்கியுள்ள சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனம் பிஓபி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.  இதில் ப்ரீத்தி பகதாலா கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் கே. எஸ். ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தற்போது ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.