Take a fresh look at your lifestyle.

100 கோடி ஹீரோ லிஸ்டில் இணைந்த சூரி

2

100 கோடி ஹீரோ லிஸ்டில் இணைந்த சூரி
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த 10ம் தேதி ரிலீசான படம் மண்டாடி. ஆர்.எஸ்.என்டர்டெயின்மெண்ட் தயாரித்த இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.இப்படம் இதுவரை உலக அளவில் ரூ 100 கோடி வசூலை குவித்துள்ளது.இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் அறிவித்துள்ளது. முன்னதாக சென்னையில் நடந்த படத்தின் வெற்றி விழாவில் சூரி பேசியது, இந்த வெற்றி எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு. மண்டாடி படத்தை பார்த்து விட்டு ரஜினி என்னை அழைத்து வாழ்த்தினார்.முதலில் விடுதலை படத்திற்காக ரஜினியிடம் பாராட்டை பெற்றேன். 3 ஆண்டு களுக்கு பிறகு மீண்டும் இப்படத்திற்காக அவரிடம் வாழ்த்து பெற்றதை என் பாக்கியமாக நினைக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.