Take a fresh look at your lifestyle.

பிரேமலு, பெத்லகேம் குடும்ப யூனிட் பட கதாசிரியர் இயக்கம் பிக்னிக்!

2

பிரேமலு, பெத்லகேம் குடும்ப யூனிட் பட கதாசிரியர் இயக்கம் பிக்னிக்!
மலையாளம்,தமிழில் சமீபத்தில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தைத் தொடர்ந்து பாவனா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் ‘பிக்னிக்’. ‘பிரேமலு’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படங்களின் இணை எழுத்தாளராகப் பணிபுரிந்த கிரண் ஜோசி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சந்தீப் பிரதீப் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகர் இந்திரஜித் சுகுமாரன் , திலீஷ்ஸபோத்தன், சுஜினா ஸ்ரீதரன் மற்றும் அக்ஷதா அஜித் ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். இப்படம் வரும் ஜனவரி 14 ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. கேரளாவைத் தாண்டி தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களிலும் அவரது முந்தைய இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், அவர்  இயக்குநராக அறிமுகமாகும் இப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.