முதலமைச்சர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்நிதியமைச்சர் திருமிகு. நிர்மலா சீதாராமன் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தங்கம் தென்னரசு எக்ஸ் பதிவு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், 2025-26 ஆம் ஆண்டு நிதியாண்டில், NABARD வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (Rural Infrastructure Development Fund – RIDF) கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (FIDF) கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ. 350 கோடி நிதியையும் விரைந்து வழங்கிட ஒப்புதல் அளிக்குமாறு மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமிகு. நிர்மலா சீதாராமன் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்களுடன் இணைந்து, இன்று டெல்லியில் மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களைச் சந்தித்து, அக்கடிதத்தை வழங்கியதுடன் விரைவில் உரிய நிதியினை வழங்கிட ஆவன செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தோம்.