Take a fresh look at your lifestyle.

காவேரி கேரக்டர் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: பிரியா பவானி சங்கர் பேட்டி

24

காவேரி கேரக்டர் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: பிரியா பவானி சங்கர் பேட்டி
காதல் முதல் கல்யாண வரை தொடரில் கதாநாயகியாக நடித்து அதன் மூலம் கிடைத்த பெயர் புகழினால் மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனவர் நடிகை பிரியா பவானி சங்கர். தொடர்ந்து தமிழில் முன்னே நடிகையாக இருந்து வரும் அவர் தெலுங்கிலும் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா நடித்துள்ள படம் ‘இருமுடி கட்டு’. இதில் அவருக்கு ஜோடியாக காவேரி என்ற கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் இன்று (21ம் தேதி) வெளியாகிறது. குடும்பம் மற்றும் உணர்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இப்படத்தில், அன்பான மனைவியாகவும், பாசமுள்ள தாயாகவும் காவேரி என்ற கேரக்டரில் பிரியா பவானி சங்கர் வாழ்ந்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரியா பவானி சங்கர் பகிர்ந்து கூறியது, “காவேரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான கதாபாத்திரம். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது, சிவா நிர்வாணா உருவாக்கியிருந்த உணர்வுப்பூர்வமான உலகத்தைப் புரிந்து கொண்டேன். இப்படிப்பட்ட நேர்மையான மற்றும் வலிமையான கதையில் நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. ரவி தேஜா சாருடன் பணியாற்றியது மிகவும் சிறப்பான அனுபவம். எல்லோருடனும் அன்பாகவும் இயல்பாகவும் பழகினார். அதனால் எங்களுக்கும் நடிப்பது எளிதாகவும் மகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகள் குறித்து சிவா மிகவும் தெளிவாக இருந்தார். அவரது வழிகாட்டுத லுடன் பணியாற்றியது அழகான அனுபவம். படப்பிடிப்பு முடிந்த போது, இந்த திரைப்படத்தைத் தாண்டியும் நாங்கள் எவ்வளவு விஷயங்க ளை எடுத்துச் சென்றிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். ஏராளமான காட்சிகளில் நடித்தோம், ஆயிரக்கணக்கான நினைவுகளை உருவாக்கினோம், இருமுடி கட்டு’படத்தின் உணர்வுப்பூர்வமான மற்றும் பக்தி சார்ந்த உலகத்துடன் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை இணைந்திருக்கும் விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தையும், அதன் கருவையும், நாங்கள் இதில் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளையும் ரசிகர்கள் தங்களுடன் இணைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.