Take a fresh look at your lifestyle.

சென்னையில் பயங்கரம்..

101

சென்னையில் பயங்கரம்..

வேலைக்காக தமிழகம் வந்த பீஹார் இளைஞர், அவருடைய மனைவி மற்றும் 2 வயது குழந்தை படுகொலை.

மனைவியை பாலியல் பலாத்காரம் செய்வதை தடுக்க முயற்சி செய்த போது கொலை செய்யப்பட்ட கொடூரம். இவர்களுடைய 2 வயது குழந்தையும் கொலை செய்யப்பட்டு, சடலம் அடையாறு ஆற்றில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

பீகார் இளைஞர் கொலை – பதறவைக்கும் தகவல்கள்

ஜன.26 அன்று பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பவரின் சடலம் அடையார் பகுதியில் சாக்கு மூட்டையில் கண்டெடுப்பு

2 மர்ம நபர்கள் டூ வீலரில் வந்து அந்த சாக்கு மூட்டையை வீசியது சிசிடிவியில் பதிவு. அதன் அடிப்படையில் 3 வட மாநில நபர்களை பிடித்து விசாரணை

கவுரவ் குமார், அவரின் மனைவி, குழந்தை என குடும்பத்தையே கொன்று விட்டதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம்

குழந்தையின் சடலம் மத்திய கைலாஷ் அருகே கால்வாயிலும் மனைவியின் சடலம் பெருங்குடி குப்பை கிடங்கிலும் வீச்சு

கவுரவ் குமார் பணியாற்றிய கல்லூரியிலேயே கட்டட வேலை பார்த்த நபர்களால் அவர் மனைவிக்கு தொடர் பாலியல் தொல்லை. இதை அறிந்து தட்டிக்கேட்டதால், இரும்பு ராடால் அடித்து கவுரவ் கொலை

மனைவியை வல்லுறவு செய்த பின், அவரையும் கொன்று 2 வயது குழந்தையையும் தரையில் அடித்து கொலை செய்ததாக விசாரணையில் பகீர் தகவல்