Take a fresh look at your lifestyle.

ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பெண்ட் ரத்து; 7 மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு உத்தரவு!

103

ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பெண்ட் ரத்து; 7 மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஆள் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறி கடந்த ஆண்டு ஜூன் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மீதான உத்தரவைத் தமிழக உள்துறை ரத்து செய்துள்ளது. துறை ரீதியான விசாரணைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் கார் கொடுத்து உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. அவருக்கு விரைவில் புதிய பணியிடம் ஒதுக்கப்படும் என கூறப்படும் நிலையில், அவர் வரும் மே மாதத்துடன் ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.