சௌந்தர்யா கேரக்டரில் ராஷ்மிகா
90களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகைகளில் முக்கியமானவர் சௌந்தர்யா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் பல்வேறு தமிழ் படங்களில் நடித்ததுடன் ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார். அதேபோல் கமலுடன் காதலா காதலா படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.மேலும் கார்த்திக் உட்பட பல ஹீரோக்களோடு நடித்துள்ளார். நடிகையாக உச்சத்தில் இருக்கும்போது விமான விபத்தில் மரணமடைந்த நடிகை சௌந்தர்யாவின் பயோபிக் பட முயற்சிகள் இப்போது வேகமடைந்திருக்கின்றன. இதில் நடிக்க ராஷ்மிகா மந்தனா விருப்பம் தெரிவித்திருக்கிறார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
Prev Post
Next Post