பாண்டிராஜின் பரிமளா அண்ட் கோ
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு தலைவன் தலைவி படம் திரைக்கு வந்தது. விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த இந்தபடம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பாண்டிராஜ் அடுத்ததாக பரிமளா அண்ட் கோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.இதன் தலைப்பு, டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.இதில் ஜெயராம், ஊர்வசி, யோகிபாபு, மிஷ்கின், சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி, சாண்டி, அனந்திகா, சனில்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, பாக்சன் இசை அமைத்துள்ளார்.தற்போது ஷூட்டிங் முடிந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது.லைகா புரொடக்ஷன்ஸ், தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பசங்க
புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
Next Post