ரியோராஜ் தயாரிக்கும் பிரவுன் மணி
நடிகர் ரியோராஜ் தயாரிப்பாளராக அறிமுகமாகி பிரவுன் மணி என்ற படத்தை தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் கதிரவன் சம்பத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ராம் நிஷாந்த்,கே.எஸ். கவி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். படத்திற்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசை அமைக்க, சக்தி சுப்பிரமணி யன் ஒளிப்பதிவு செய்கிறார். லைவ் சவுண்ட் முறையில் எடுக்கப்படும் இப்படத்தை ரியோராஜின் ரிவர்ரூட் ஸ்டூடியோஸ் மற்றும் ரெட்ராக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து ள்ளது.குடும்பம் மற்றும் நண்பர்கள் உறவை மையமாகக் கொண்ட இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.
Prev Post
Next Post