Take a fresh look at your lifestyle.

நிவேதா பெத்துராஜின் திருக்குறள் வைரல்

1

நிவேதா பெத்துராஜின் திருக்குறள் வைரல்
நடிகை நிவேதா பெத்துராஜின் அடிக்கடி வலைதளங்களில் பதிவிடும் விஷயங்கள் கவனம் ஈர்க்கும். அந்தவகையில் தற்போது திருக்குறள் ஒன்றை பதிவிட்டு இருப்பது வைரலானது. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும். – திருக்குறள் 183. இதன் அர்த்தம் பிறர் இல்லாதபோது அவரை பற்றி இழிவாக பேசுவதும், நேரில் காணும்போது பொய்யாக நடித்து வாழ்வதும் மிகப்பெரிய இழிவாகும். அத்தகைய கேவலமான வாழ்க்கையை வாழ்வதை விட இறந்து விடுவது நல்லது. அதுவே அறநூல்கள் கூறும் புகழையும் நன்மையையும் தரும். எதற்காக நிவேதா இப்படி ஒரு குறளை பதிவிட்டார். இவரது பதிவு யாருக்கானது என்பது புரியாமல் ரசிகர்கள் கீழே கமென்ட்டில் அவரவர் இஷ்டத்திற்கு பதிவுகளை போட்டு வருகின்றனர்.