நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தென்னிந்திய அளவில் வேறு யாரும் இந்த அளவிற்கு சம்பளம் வாங்கவில்லை. அவர் தற்போது கன்னடத்தில் “டாக்சிக்” படத்திலும், தமிழில் “ஹாய்” படத்திலும் நடித்துள்ளார். இரண்டு படங்களுமே அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த வாரம் பெங்களூருவில்
நடந்த “டாக்சிக்” பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா கலந்து கொண்டு பேசினார். அடுத்து “ஹாய்” படத்திற்காக டிவி நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றுள்ளார்.தான் நடித்த படங்களின் புரமோஷனுக்கும் வராத நயன்தாரா “டாக்சிக்” பட விழாவில் கலந்து கொண்ட. இது பற்றி அவர் கூறும்போது, யஷ் அழைத்ததால் அதில் கலந்து கொண் டேன் என்றார். தற்போது “ஹாய்” பட ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது, அதில் தானும் ஒரு தயாரிப்பாளர் என்பதை தாண்டி, இந்த காலகட்டத்திற்கு பிரமோஷன் மிக மிக அவசியம் என்பதை நயன்தாரா புரிந்து கொண்டுள்ளார். அதோடு காம்பெடிஷன் அதிகம் இருப்பதால் இனி அவர் நடிக்கும் எல்லா பட விழாக்களிலும் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.
Prev Post
