Take a fresh look at your lifestyle.

ஆள விடுங்க சாமி…..

1

ஆள விடுங்க சாமி…..
80 களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ஹீரோயினாக அறிமுகமாகி இந்தி படங்களில் நடித்து வந்தார். அம்மாவைப் போல் தென்னிந்திய நடிகை ஆக வேண்டும் என்ற ஆசையில் கடந்த ஆண்டு தெலுங்கில் தேவரா என்ற படத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தார். அந்த படத்தில் அவரை கவர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்தினர். அடுத்ததாக ராம் சரண் ஜோடியாக பெத்தி படத்தில் நடித்தார். இந்த படத்திலும் அவரை படு கவர்ச்சியாக காட்டி, டம்மி கேரக்டரில் நடிக்க வைத்திருந்தனர். இதனால் செம மூடு அவுட் ஆன ஜான்வி டோலிவுட்டுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, ஆள விடுங்க சாமி.. என மீண்டும் பாலிவுட்டுக்கே ஓடி விட்டாராம். (கொசுறு செய்தி), தாய் வீடான தமிழ் சினிமாவிலிருந்து வாய்ப்பு வந்தால் உடனே ஓடி வந்து விடுவாராம்..!!