‘மொத ராத்திரி’ பட ரிலீஸ் அப்டேட்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில் குமார் நடித்துள்ள படம் ‘மொத ராத்திரி’. அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் ராஜா கருப்பசாமி கூறுகையில், ஒரு திருமணம், ஒரு இரவு, முடிவில்லா குழப்பம் இதுதான் இந்த படத்தின் ஆன்லைன் ஸ்டோரி. ஒரு திருமண வீட்டில் ஒரு இரவில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை படமாக்கி உள்ளோம். நிச்சயம் குடும்பத்துடன் பார்க்கும் பொழுதுபோக்கு படமாக இது இருக்கும் என்றார்.