Take a fresh look at your lifestyle.

‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ‘வானே வானே.. ‘பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

2

‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ‘வானே வானே.. ‘பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்
நடிகர் துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ ’என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கிறார். இதில் துல்கருக்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.இந்த படத்திற்கு அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ‘வானே வானே..’ எனும் முதல் பாடலை துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.பான் இந்தியா படமான ‘ஸ்ரீ ஸ்ரீ’, தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது.