“வலிமையுடன் திரும்பி வருவேன்”: காயம் குறித்து அருண் விஜய் !
முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படம் ‘இருளன்’.நேதாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் சண்முகவேல் பாண்டியன் இப்படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படம் போர்குடி காவல் இனத்தின் வீர வரலாறு என்ற டேக் லைனுடன் உருவாகிறது. இதனால் பீரியட் டிராமா ஜானரில் தயாராகிறது. மிர்னா ஹீரோயினாக நடிக்க,சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் நடிக்கின்றனர். படப்பிடிப்பு திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அருண் விஜய் கூறியது, இருளன் படப்பிடிப்பின் போது எனது தொடையின் தசை கிழிந்து விட்டது. இப்போது அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். இதெல்லாம் விளையாட்டின் ஒரு பகுதிதான். இன்னும் வலிமையுடன் திரும்பி வருவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Prev Post
Next Post
