Take a fresh look at your lifestyle.

இயக்குனராக இருந்து வில்லன் ஆனது எப்படி?: அசுரன் ஜெகே பேட்டி:

24

இயக்குனராக இருந்து வில்லன் ஆனது எப்படி?: அசுரன் ஜெகே பேட்டி:
சினிமாவில் வில்லன் பவர்ஃபுல்லாக இருந்தால்தான் ஹீரோ பேசப்படுவார். அவரால் ஹீரோயிசம் காட்ட முடியும். அந்த அளவுக்கு ஹீரோவுக்கு நிகராக வில்லன் கேரக்டரும் எழுதப்படும். வில்லனுக்கென்று ஒரு முகம் சினிமாவில் கட்டமைக்கப்படும். அப்படி ஒரு முக பாவத்துடன் இருப்பவர் தான் அசுரன் ஜெகே.வில்லத்தனத்துக்கு ஏற்றார் போல் தனது பாடி லாங்குவேஜ் மூலம் ரசிகர்களை விரட்டி வருகிறார். பல இயக்குனர்கள் இன்று நடிகர்களாக ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயிக்கவும் இயக்குனராக இருந்து இன்று வில்லன் நடிகராக மாறி இருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியை வைத்து வன்மம் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதன் பிறகு தனது ரூட்டை மாற்றி நடிகராகி விட்டார். வெற்றிமாறனின் அசுரன் படம் தொடங்கி, சாணிக்காயிதம்,கேப்டன் மில்லர், லால் சலாம், வா வாத்தியார், கர, கருப்பு, பிளாஸ்ட் என்று தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அவர் சமீபத்தில் ஓடிடியில் வெளிவந்த லிங்கம் வெப்சீரிசிலும் மிரட்டல் நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை பெற்ற அசுரன் ஜெ.கே.தான் நடிகரான கதையை பற்றி கூறியது வருமாறு, நான் உதவி இயக்குனராக ராஜ்கமல் பிலிம்சில் சேர்ந்து பணிபுரிந்தேன்.2014-ல் வன்மம் படத்தை இயக்கினேன். அதில் விஜய் சேதுபதி தான் ஹீரோ. அதுவரை சாப்டான கேரக்டர்களில் நடித்து வந்த அவரை முதன் முதலில் முழு ஆக்சன் ஹீரோவாக நான் காட்டிஇருந்தேன். என் முகத்தை பார்த்து விட்டு பலரும் வித்தியாசமான முகமாக இருக்கிறது என்று சொல்லி சினிமாவில் நடிக்கலாம் என்றனர். பலரும் இப்படி சொல்லலே நடிக்கலாமோ என நினைத்தேன்.அதற்கு ஒரு நல்ல அறிமுகம் வேண்டும் என்னை யோசித்து இயக்குனர்வெற்றிமாறனிடம் வாய்ப்பு கேட்டு நடித்துக்காட்டினேன். எனது நடிப்பை பார்த்த வியந்த அவர் உடனே அசுரன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படம் ரிலீஸ் ஆகி எனது முகமும் பெயரும் வெளியில் தெரியத் தொடங்கியது.அதற்கு பிறகு மெல்ல மெல்ல புதிய படங்கள் வர தொடங்கின.இதுவரை சிறியதும் பெரியதுமாக 25 படங்களில் நடித்து முடித்து விட்டேன்.அண்மையில் வெளிவந்த லிங்கம் இணையத் தொடரில் என கதாபாத்திரம் பரவலாக பேசப்படுகிறது. ரஜினி, கமல் என்கிற இரண்டு லெஜெண்டுகளுடன் பணியாற்றிய அனுபவங்களை என் வாழ்க்கையில் பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். தொடர்ந்து நல்ல கதையுடன் வில்லனுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார்.