Take a fresh look at your lifestyle.

மகாராஷ்டிராவில் கொடூரம்

236

மகாராஷ்டிராவில் கொடூரம்

மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை செய்துள்ளது பள்ளி நிர்வாகம்

மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கழிப்பறையில் ரத்தக்கறை இருப்பதாகக் கூறி, செவ்வாயன்று 5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளிடம் பள்ளி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர்.

மாணவிகளில் யாருக்கேனும் மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறதா என பள்ளி நிர்வாகம் கேள்வி எழுப்பியுள்ளது. அப்போது மாதவிடாய் இருப்பதாக தெரிவித்த மாணவிகளின் கைரே கையைப் பள்ளி நிர்வாகம் பெற்றுள்ளது.
மேலும் மாதவிடாய் இல்லையெனக் கூறிய மாணவிகளை சந்தேகப்பட்டு அதனை கண்டுபிடிக்க கழிப்பறைக்கு அழைத்துச் சென்று, அவர்களை நிர்வாணப்படுத்தி, அவர்களது பெண்ணுறுப்பை சோதனை செய்துள்ளனர்.

இதனை குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து புதன்கிழமை பள்ளி வளாகத்தில் மாணவிகளின் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்திற்குப் பிறகே பள்ளி முதல்வர், 4 ஆசிரியர்கள், உதவியாளர்கள் உள்பட 8 பேரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளது.