Take a fresh look at your lifestyle.

போர்த் ஃப்ளோர் -விமர்சனம்

35

போர்த் ஃப்ளோர் -விமர்சனம்
மும்பையில் ஐடி துறையில் வேலை செய்யும் ஆரி அர்ஜுனன்,சென்னைக்கு பணிமாறுதல் ஆகி வருகிறார்.புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் தங்குகிறார்.அப்போது உதவி கேட்ட அவரின் முன்னாள் காதலியை ரீச் செய்ய முடியாமல் தவிக்கிறார். இதனிடையே அவருக்கு தினமும் கனவில் அவர் கொல்லப்படுவது தோன்றுகிறது. அப்போது அந்த பிளாட்டில் தனது காதலி புகைப்படம் இருக்கிறது. அது பற்றி விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது அது என்ன? என்பதை படத்தின் மீதி கதை.சாதாரண ஐடி இளைஞரான‌ ஆரி அர்ஜுனன், மர்மங்கைள அவிழ்க்கும் மனிதராக மாறும் பயணத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.பவித்ரா மற்றும் தீப்ஷிகா இருவரும் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். வில்லனாக வரும் சுப்பிரமணிய சிவா, முகபாவைனகள் கவனம் ஈர்க்கிறது.திகில், கிரைம் திரில்லர், குடும்ப உணர்வு, சமூக கருத்து என பல அடுக்குகளுடன் கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டியன். இருப்பினும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். தரன் குமார் இசை, லக்ஷ்மன் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.