தமிழில் கம் பேக் கொடுத்த நமிதா
எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. இவர் தனது ரசிகர்களை ஹாய் மச்சான் என உற்சாகப்படுத்தி வந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நமிதா தொழிலதிபர் வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அதன் பிறகு பிஜேபியில் சேர்ந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் படம் ஒன்றில் கம் பேக் கொடுத்துள்ளார்.
பிரபல யூடியூபபர் வி ஜே சித்து இயக்கி வரும் டயங்கரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இது குறித்து சித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியது, சமீபத்தில் எனது படத்தின் ஷூட்டிங் இருக்கு நமீதா வந்தார். அவரை பார்க்க நன்றாக இருந்தது.படத்தில் நமீதா சிறப்பு தோற்றத்தில் வருகிறார் என்றார்
Prev Post
Next Post