Take a fresh look at your lifestyle.

என் நடிப்பை பார்த்து தனுஷ் பாராட்டினார்: கஸ்தூரிராஜா பேச்சு

2

என் நடிப்பை பார்த்து தனுஷ் பாராட்டினார்: கஸ்தூரிராஜா பேச்சு
மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரிராஜா, மாளவிகா மனோஜ் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ஹபீபீ. இப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில் இதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர், நடிகர் கஸ்தூரி ராஜா பேசியது, இந்தப் படத்தில் என்னை நடிக்க வைக்க இயக்குனர் மீரா கதிரவன் அனுகிய போது சிறிய தயக்கம் இருந்தது. இருப்பினும் அவரை நம்பி தான் படத்தில் நடித்தேன். படம் வெளியானதும் என் மகன்கள் நான் செல்வராகவன், நடிகர் தனுஷ் படத்தை காட்டினேன். இருவரும் பார்த்துவிட்டு பாராட்டினார்கள். அப்பா நல்ல கதைகள் சிறப்பாக நடித்துள்ளீர்கள் என தனுஷ், பாராட்டினார். இதுதான் இந்த படத்துக்கு கிடைத்த வெற்றியாக நான் பார்க்கிறேன் என்றார்.