ரியாலிட்டி ஷோவில் பங்கேற்காதது ஏன்?: சாணியா ஐயப்பன் பதில்
மலையாளம் மற்றும் தமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகை சானியா ஐயப்பன், ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதோடு சினிமா விருது வழங்கும் விழாக்களில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்து வரும் அவர் சமீப காலமாக விழாக்களில் நடனம் ஆடுவதை குறைத்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், தற்போது நடன நிகழ்ச்சிகள் குறைவாகவே நடக்கின்றன.சமீபத்தில் கார்ப்பரேட் நிகழ்ச்சிகளுக்கு நடனமாட சென்றிருந்தே ன்.அங்கே மதுபானம் பரிமாறுகிறார்கள்.ஒரு கட்டத்திற்கு பிறகு அவர்கள் மேடைக்கு முன்னாள் வந்து நடனம் ஆடுகிறார்கள். இது எனக்கு அசவுகரியமாக இருப்பதால் நடனம் ஆடுவதை குறைத்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
Prev Post