ரஜினி படத்தின் டைட்டில் “தர்மன்”
இந்திய சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நட்சத்திரங்களாகத் திகழும். கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். ரஜினிகாந்த் நடிக்கும் 173 வது படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.இந்த படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்த படத்திற்கு தர்மம் என டைட்டில் வைத்துள்ளனர். அதோடு நேற்று முதல் இப்படத்தின் படபிடிப்பும் பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகைகள் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்திற்கு நிகேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்ய, அன்பரிவ் சண்டை பயிற்சி அளிக்கின்றனர். மெடிக்கல் திரில்லர் ஆக உருவாக்கும் இந்த படம் டிசம்பர் மாதம் ரஜினி பிறந்த நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Prev Post