Take a fresh look at your lifestyle.

“ நாகபந்தம்” படம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும்:நாபா நடேஷ்

3

“ நாகபந்தம்” படம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும்:நாபா நடேஷ்

இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடித்துள்ள படம் நாகபந்தம்.இப்படத்தில் நாபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள னர். சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்ய, அபே இசையமைத்துள் ளார். வரும் ஜூலை 3 ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகை நபா நடேஷ் பேசியது,இதில் பணியாற்றியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. படத்தின் கதையும், உருவாக்கப் பட்ட உலகமும் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும்.இது சாதாரணமான திரைப்படம் அல்ல. நமது வரலாறு, மர்மம், சாகசம், ஆக்சன், திரில்லர் மற்றும் உணர்வு என அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவம் என்றார்.