Take a fresh look at your lifestyle.

முதல்வர் விஜய்க்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து: கலைஞராக இருந்து தலைவராக உயர்ந்து உள்ளீர்கள்!!

4

விஜய் முதல்வரான பிறகு திரையுலகினர் பலர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் விஜய்யை, சிவகார்த்திகேயன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்து தனது எஸ்கே பகிர்ந்த தகவல் வருமாறு, மக்களின் மனங்களை மகிழ்வித்த கலைஞராக இருந்து இன்று ஒரு மாநிலத்தை வழி நடத்தும் தலைவராக உயர்ந்து இருக்கிறீர்கள். சில பயணங்கள் உண்மையில் அசாதாரணமான வை.முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது எனக்கு பெருமையான தருணம். ரசிகன் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் தொடங்கி, விஜய் அவார்ட்ஸ், கோட் படத்தில் உங்களுடன் திரையை பகிர்ந்தது வரை இப்போது உங்களை இந்த பொறுப்பில் சந்தித்த இத்தருணம் என் வாழ்க்கையில் எப்போதும் சிறப்பான நினைவாக இருக்கும். நமது சகோதரத்துவமும் நமது பிணைப்பும் என்றும் தொடரும் என பதிவிட்டுள்ளார்.