பன் பட்டர் ஜாம் மூலம் பெட்டரான பவ்யா (அ)
நடிப்புத் திறமை உள்ள கேரக்டரில் மட்டுமே நடிக்க விரும்பும் பவ்யா த்ரிகா
சென்னை எம்.ஒ.பி வைஷ்ணவக் கல்லூரி மாணவியான பவ்யா த்ரிகா, 2022-ல் தினேஷ் பழனிவேல் இயக்கிய ‘கதிர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்துள்ள பவ்யாவுக்கு ‘ஜோ’ படம் திருப்புமுனையாக அமைந்தது. அதில் “ஸ்ருதி” என்ற கேரக்டர் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். தற்போது வெளியாகி உள்ள ‘பன் பட்டர் ஜாம்’ படத்தில் பிராமிஸ் சிங்கமான கேரக்டரில் நடித்துள்ளார். கல்லூரி மாணவியாகவும், ராஜுவின் காதலியாகவும் அவர் நடித்த வலிமையான கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. வழக்கமான ஹீரோயின் கேரட்டர்களை தவிர்த்து நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் ரோல்களில் நடிப்பதையே விரும்புவதாக பவ்யா கூறியுள்ளார்.