சங்கிகளுக்கு கோபம்: உதயநிதி ஸ்டாலின்
கொள்கை, லட்சியம் என்றால் என்னவென்றே தெரியாமல், கட்டுப்பாடு இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் சுற்றுகிறது. அவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பயனும் கிடையாது; இதனை தமிழ்நாட்டு மக்கள் விரைவில் உணர்த்துவார்கள்.
அப்போதும், இப்போதும், எப்போதும் களத்தில் நிற்கும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அதனால் மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது; இதனால் சங்கிகளுக்கு நம் மேல் எரிச்சலும், கோபமும் வருகிறது.
– விருதுநகர் மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஒரே இயக்கம்!
இந்தியாவில் 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரே இயக்கம் திமுக இளைஞரணி இயக்கம்தான்
கழகப்பணி, மக்கள் பணி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் பணியில் திமுக இளைஞரணி ஈடுபட்டுள்ளது
-துணை முதல்வர் உதயநிதி