அமரம் -விமர்சனம்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழ்ந்து வரும் ராஜன் தேஜஸ்வர், பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையாக இருந்து வருகிறார். சென்னையில் ஐரா அகர்வாலின் அப்பா சுரேஷ் மேனனை கொலை செய்துவிட்டு தப்பிக்கும் போது அவருடைய கண்களை ஐரா பார்த்து விடுகிறார். அவரைத் தேடி மலை கிராமத்துக்கு வரும் அவர் பெரிய பிரச்சனையில் சிக்குகிறார். அது என்ன? அதில் இருந்து எப்படி மீனார் ?என்பதே படத்தின் மீதி கதை. கிராமத்துக் காட்டான் லுக்கில் அதிகம் பேசாமல் அழகாக நடித்துள்ளார் ராஜன் தேஜஸ்வர்.ஐரா அகர்வால் நடிப்பு ஓகே. மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ஹரிஷ் பெராடி ஆகியோரின் அனுபவ நடிப்பு பிளஸ். மலைவாழ் மக்களின் வறுமையை பயன் படுத்திஅவர்களை கொலைகாரர்களாக மாற்றும் முதலாளிகளின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் அருள் கிருஷ்ணா. இருப்பினும் திரைக்கதையில் சுவாரசியம் குறைவு.மிக்கி ஜே மேயரின் இசை, பரத் குமாரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
Prev Post