சென்சார் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்ற தி டார்க் ஹெவன்
முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. தணிக்கைக்குச் சென்ற இத்திரைப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் ஒரு வெட்டுக்குக் கூட வாய்ப்பு இல்லாமல் அழகாக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது என்று பாராட்டி இருக்கிறார்கள்.இதனையே இந்தப் படத்திற்கான ஒரு பாராட்டாக கருதி மகிழ்ந்து கொண்டிருக் கிறது படக்குழு. இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ என்ற படத்தை இயக்கியவர். அந்தப் படமும் பட உருவாக்கத் தின் நேர்த்திக்காகப் பேசப்பட்டது.அவர் இரண்டாவதாக இயக்கியிருக்கும் இந்த ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய,சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார்.கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, ராமநாதபுரம், குற்றாலம் ,தென்காசி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.இப்படம் வரும் செப்டம்பர் 18ம் தேதி வெளியாகிறது.
Prev Post
Next Post