Take a fresh look at your lifestyle.

மக்கள் தலைவா -விமர்சனம்

2

மக்கள் தலைவா -விமர்சனம்
காமராஜரின் கல்வி உதவியால் படித்து பெரிய தொழிலதிபராகி வெளிநாட்டில் மிகப்பெரிய செல்வந்தராக திகழும் ராதாரவி, அவரை தோற்கடித்த மக்களுக்கு பாடம் கற்பிக்கும் நோக்கில் தமிழகம் வருகிறார். இங்கு சமூக போராளி என்ற போர்வையில் அரசியல்வாதிகளிடம் பணம் கறக்கும் ரவிமரியாவை தேர்ந்தெடுத்து, அவர் மூலம் தனது கார்ப்பரேட் அரசியலை அரங்கேற்றுகிறார். இந்த அரசியல் நாடகத்தில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. சமகால அரசியலை நக்கலும் நையாண்டியும் கலந்து காமெடி படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ராம்தேவ். இருப்பினும் நடுநிலையான பலருக்கு காமராஜரை தோற்கடித்த இந்த மக்களுக்கு இது போன்ற அரசியல்வாதிகள் தான் சரியானவர்கள் என்ற எண்ணம் இருக்கும். அந்த எண்ணத்தையும் பிரதிபலித்து அதன் மூலம் ஒரு திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. இருப்பினும் முதல் பாதியில் உள்ள விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லாதது படத்திற்கு பலகீனம். கதை நாயகன் ரவி மரியா என்றாலும் அவரை இயக்கும் ரிமோட்டாக ராதாரவி நடித்திருப்பது சிறப்பு. அதே போல் ரவி மரியாவும் தனக்கே உண்டான எதார்த்த நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்கிறார். அவரின் நண்பர்களாக வரும் கஞ்சா கருப்பு மற்றும் அக்னி வருண் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அதேபோல் அரசியல்வாதிகளாக வரும் பல கருப்பையா மற்றும் நாஞ்சில் சம்பத் இருவரும் நிஜத்தில் இருப்பது போலவே வாழ்ந்துள்ளனர். ஹீரோயின் அக்ஷரா விஜய்க்கு பெரிதாக எதுவும் கேரக்டர் இல்லை. இயக்குனர் பேரரசு ஆட்டோ டிரைவராக ஒரு சீனில் வந்து பாட்டிலுக்கு பத்து ரூபா கான்செப்டில் கலக்கியுள்ளார்.துளசிராமன் இசை மற்றும் கார்த்திக் எஸ் நாயர் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.