ஹீரோவான சூரி பட இயக்குனர்
விமல் நடித்த ‘விலங்கு’ வெப் தொடர் மற்றும் சூரி நடித்த ‘மாமன்’ படத்தை இயக்கியவர் பிரசாந்த் பாண்டியராஜ்.இவர், தற்போது வாரண்ட் என்ற வெப் தொடரில் நடித்து ஹீரோவாக அறிமுகமாகிறார். சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள் ளார். இந்த தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வையும் பிரசாந்த் பாண்டியராஜ் மேற்கொண்டுள்ளார். மேலும், பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், நம்ரிதா, அருள் ஜோதி, அருள் தாஸ், சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஜீ5 ஓடிடியில் வரும் 22ம் தேதி இத்தொடர் வெளியாகிறது.
Prev Post
Next Post