Take a fresh look at your lifestyle.

ஸ்டாலின் கனவை சுக்குநூறாக்குவோம்: டிடிவி தினகரன்

144

ஸ்டாலின் கனவை சுக்குநூறாக்குவோம்: டிடிவி தினகரன்

மதுரை என்டிஏ பொதுக் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியது:

“தமிழ்நாட்டில் எங்கும் கொலை எதிலும் ஊழல் நிலவும் ஆட்சி நடக்கிறது. குழந்தைகள், மாணவிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் அவலம் நடந்துக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் முதல் குடும்பத் தலைவர்கள் வரை குடிக்கு அடிமையாக்கப்பட்டுள்ள ஆட்சி நடக்கிறது.

அனைத்து வகை மக்களும் தெருவுக்கு வந்து போராடும் ஆட்சி நடக்கிறது. உதயநிதியை ஆட்சியில் அமரவைத்து முதல்வராக்கிவிடலாம் என்று கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின். அவரின் கனவை சுக்குநூறாக்கும் வகையில், இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்.”