இஸ்ரேல் விமான நிலையத்தில் அணிவகுக்கும் அமெரிக்க ‘டேங்கர்’ விமானங்கள்; ஈரானைத் தாக்கத் தயாரா?
டெல் அவிவ் நகரின் பென் குரியன் விமான நிலையத்தில் சுமார் 14-க்கும் மேற்பட்ட அமெரிக்காவின் கேசி-135 (KC-135) மற்றும் கேசி-46 (KC-46) எரிபொருள் நிரப்பும் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதால் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
“தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்”: இஸ்ரேலில் உள்ள சீனர்களுக்கு அந்நாட்டு தூதரகம் அவசர எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருவதால், இஸ்ரேலில் வசிக்கும் சீனக் குடிமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், அவசரத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
ஈராக்கில் இருந்து வெளியேறும் அமெரிக்கர்கள்; பாக்தாத் விமான நிலையத்தில் குவியும் பயணிகள்!
ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில், கடந்த 24 மணி நேரத்தில் ஏராளமான அமெரிக்கக் குடிமக்கள் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் வழியாக ஈராக்கை விட்டு வெளியேறியுள்ளனர்.
எல்லைத் தாக்குதல்களுக்கு இந்தியா உதவி”; பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் பகிரங்கக் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மற்றும் எல்லைப் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களுக்கு இந்தியா நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. தங்கள் நாட்டின் பாதுகாப்பைக் குலைக்க இந்தியா சதி செய்வதாகப் பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
“அண்டை நாடு மீது அணு ஆயுதத் தாக்குதல் கிடையாது”; ரஷ்யாவில் பாகிஸ்தான் தூதர் திட்டவட்ட அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானுடன் ‘நேரடிப் போர்’ நடைபெற்று வரும் சூழலில், பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என எழுந்துள்ள அச்சத்தைப் பாகிஸ்தான் தூதர் திர்மிதி மறுத்து உள்ளார். எந்தச் சூழ்நிலையிலும், எந்த நாட்டின் மீதும், குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் எண்ணம் பாகிஸ்தானுக்கு இல்லை என அவர் உறுதி அளித்துள்ளார்.
“நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்”: ஈரானின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இஸ்ரேல் ராணுவம் உறுதி!
மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், இஸ்ரேல் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஐடிஎஃப் (IDF) வீரர்கள் முழு விழிப்புடன் இருப்பதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாடாளுமன்றம் அருகே அயன் டோம் பாதுகாப்பு; ஈரான் தாக்குதலை எதிர்கொள்ளத் தயார்!
ஈரான் மீதான வான்வழித் தாக்குதலுக்குத் தயாராகி வரும் நிலையில், முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் நாடாளுமன்றக் கட்டடத்தைப் பாதுகாக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் அயன் டோம் ஏவுகணைத் தடுப்பு அமைப்பைக் கினெசெட் அருகே நிறுவியுள்ளது.
ஜெருசலேமில் உச்சகட்டப் பாதுகாப்பு; கினெசெட் அருகே ஏவுகணை எதிர்ப்பு பேட்டரி நிலைநிறுத்தம்!
ஈரானிடமிருந்து வரக்கூடிய ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க, இஸ்ரேலின் மிக முக்கியப் பகுதியான ஜெருசலேமில் அயன் டோம் உள்ளிட்ட பாதுகாப்பு வளையங்களை ஐடிஎஃப் (IDF) வீரர்கள் அமைத்துள்ளனர்.
ஈரானின் ஏவுகணைகள் 2,000 கி.மீ தூரம் வரை தாக்கக்கூடியவை என்பதால், இஸ்ரேலின் முக்கிய நகரங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புர்ஜ் கலிஃபா பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றம்!
துபாயில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மழை: பல இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் ஏவிய அடுத்தடுத்த அலைகளில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் இஸ்ரேலின் பல பகுதிகளில் விழுந்து வெடித்துள்ளதால் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர்.
அல் குத்ஸ் மற்றும் ரமல்லாவில் தாக்குதல்!
அல் குத்ஸ் (Al Quds) மற்றும் ரமல்லா (Ramallah) நகரங்களின் வான்பரப்பில் மிகப்பெரிய வெடிப்புச் சத்தங்களுடன் தாக்குதல் நடத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ என்பது ‘இஸ்ரேல் ஃபர்ஸ்ட்’ ஆக மாற்றம்!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ கொள்கை தற்போது ‘இஸ்ரேல் ஃபர்ஸ்ட்’ ஆக மாறியுள்ளதாகவும், இது இறுதியில் ‘அமெரிக்கா லாஸ்ட்’ (America Last) என்பதையே குறிக்கும் என்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி சாடியுள்ளார்.
“ஆக்கிரமிப்பாளர்களுக்குப் பாடம் புகட்டுவோம்”: ஈரான் உறுதி!
தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உரியப் பாடத்தைப் புகட்டுவோம் என்று தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர், எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்
அமெரிக்கா, இஸ்ரேல் சொத்துகள் இனி இலக்குகளே: ஈரான்
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சொத்துகளும் (Assets) ஈரானியப் படைகளின் நியாயமான இலக்குகளாக மாற்றப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“சிவப்புக் கோடுகள் இனி இல்லை”: ஈரான் எச்சரிக்கை
இலக்கை அடையாத அமெரிக்க – இஸ்ரேலிய ஏவுகணைகள்: IRGC
ஈரான் மீது ஏவப்பட்ட ஏராளமான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஏவுகணைகள் தங்களது இலக்குகளை அடையத் தவறி, ஈராக் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளின் வெற்றுப் பகுதிகளிலும் நகரங்களிலும் பாலைவனங்களிலும் விழுந்துள்ளதாக IRGC தெரிவித்துள்ளது.
“35 ஏவுகணைகள் இலக்கை எட்டின”: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் குறித்து தகவல்
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் குறைந்தது 35 ஏவுகணைகள் இஸ்ரேலின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கியுள்ளதாக ஈரான் நாட்டு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் அவசர நிலை: காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்யத் தலைவர்கள் அழைப்பு
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலியத் தரப்பில் கணிசமான உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் உடனடியாக ரத்த தானம் செய்ய முன்வருமாறு சீயோனிசத் தலைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
35 ஏவுகணைகள் இலக்கை எட்டின”: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் குறித்து தகவல்
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் குறைந்தது 35 ஏவுகணைகள் இஸ்ரேலின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கியுள்ளதாக ஈரான் நாட்டு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
இஸ்ரேலில் அவசர நிலை: காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்யத் தலைவர்கள் அழைப்பு
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலியத் தரப்பில் கணிசமான உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் உடனடியாக ரத்த தானம் செய்ய முன்வருமாறு சீயோனிசத் தலைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
11 மையங்களில் ரத்த தானம்: ஏவுகணைத் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல்
தாக்குதலில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாக, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் 11 ரத்த தான மையங்கள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
“தேர்தலில் வெல்ல ஒபாமா போர் தொடங்குவார்”: 2011-ல் டிரம்ப் பதிவிட்ட பழைய ட்வீட் வைரல்!
2012 அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒபாமா ஈரான் மீது போர் தொடுப்பார் என 2011-ல் டிரம்ப் விமர்சித்திருந்தார்; ஆனால் தற்போது அவரே ஈரான் மீது நேரடித் தாக்குதல்களை முன்னெடுத்து வருவது முரண்பாடாகப் பார்க்கப் படுகிறதாக சர்வதேச வட்டாரங்களில் பேச்சுப்பொருளாகி உள்ளது.
அமெரிக்க ரேடார் தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: பஹ்ரைனில் பெரும் சேதம்!
பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு ரேடார் அமைப்பை ஈரானின் ‘ஷாஹெட்’ தற்கொலைப்படை ட்ரோன் வெற்றிகரமாகத் தாக்கியுள்ளது; இதில் ரேடார் கட்டமைப்பு பலத்த சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு.
மத்திய கிழக்கில் அதிர்ச்சி.
அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியது.
அமெரிக்க போர்க்கப்பலை தாக்கினால் “அமெரிக்கா மீது நேரடியாக போர் தொடுப்பதற்கு சமமாக கருதப்பட்டு, மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்படும்” என ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.