வெற்றிமாறன் வெளியிட்ட“சைலப்பன் சைக்கிள் மார்ட்” பட பர்ஸ்ட் லுக்
சுகா இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் உருவான “சைலப்பன் சைக்கிள் மார்ட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். பேமிலி எண்டர்டெய்ன ரான இந்த படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து நடித்துள்ளார். மேலும் எம். எஸ். பாஸ்கர், இளவரசு, மூணார் ரமேஷ், இயக்குநர் சுப்ரமணிய சிவா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். தற்போது ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
Prev Post
Next Post