Take a fresh look at your lifestyle.

அஜித் பவாரின் எதிர்பாராத மரணம் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது.

120

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணம் செய்த வி.எஸ்.ஆர் (VSR) நிறுவனத்துக்கு சொந்தமான ‘VT-SSK’ பதிவு எண் கொண்ட ‘லியர்ஜெட் 45’ (Learjet 45) ரக விமானம், பார்மதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மும்பையிலிருந்து பார்மதிக்குச் சென்ற போது நிகழ்ந்த இந்த விபத்தில், துணை முதல்வர் அஜித் பவார், அவரது பாதுகாப்பு அதிகாரி (PSO), உதவியாளர் மற்றும் இரண்டு விமான ஓட்டிகள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் (முதலில் பலி 6 என தெரிவிக்கப்பட்டிருந்தது) விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக டி.ஜி.சி.ஏ (DGCA) முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளது.

அஜித் பவாரின் எதிர்பாராத மரணம் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது: பிரதமர் மோடி இரங்கல்

அஜித் பவாரின் எதிர்பாராத மரணம் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது.

கடின உழைப்பாளியான அஜித் பவார் மராட்டிய மக்களுக்கு சேவை செய்வதில் பிரதானமாக கொண்டிருந்தார்.

விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றம் மற்றும் அரசின் நிர்வாகம் பற்றிய அவரது புரிதல் குறிப்பிடத்தக்கது

ராஜ்நாத் சிங் இரங்கல்

“அஜித் பவாரின் உயிரிழப்பை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்

மகாராஷ்டிராவின் வளர்ச்சி மற்றும் செழிப்பிற்காக அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். அஜித் பவாரின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்