திமுகவின் கொடூர ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்போம்..!
பிரதமர் மோடி..!
இங்கு ஜனநாயகம் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை. திமுக அரசாங்கம் ஒரேயொரு குடும்பத்திற்காக மட்டும் இயங்கிக்கொண்டிருக்கிறது. நீங்கள் திமுகவில் முன்னேற வேண்டுமென்றால் ‘ஆமாம் சாமி!’ போட வேண்டும். வம்சாவளி பாதை, ஊழல் பாதை, பெண்களை வசைபாடுவது, நம்முடைய கலாச்சாரத்தை வசைபாடுவது போன்றவற்றால்தான் திமுகவில் இருப்பவர்கள் கட்சியில் முன்னேற முடிகிறது. தமிழ்நாட்டில் எவ்வளவு ஊழல் மலிந்திருக்கிறது, அந்த ஊழல் பணம் யாருடைய பைகளுக்கு செல்கிறது என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் கூட தெரியும்.”
திமுக அரசு போதைப்பொருள்
மாபியாவுடன் கைகோர்த்து செயல்படுகிறது
என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன; தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்தால்,
தமிழ்நாடு போதைப்பொருள் மாபியாவிலிருந்து விடுபடும்
செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்
குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில்
மிகச்சிறப்பாக செயலாற்றினார்”
– மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
தமிழ்நாட்டின் வளர்ச்சி மனிதன்
எம்ஜிஆரை தமிழ்நாட்டின் வளர்ச்சி மனிதன் என்று குறிப்பிட்டு பேசிய பிரதமர்.
சமீபத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், வளர்ச்சி மனிதன் என்று NDA பொதுக்கூட்ட மேடையில் புகழாரம்
ஜெயலலிதாவுக்கு புகழாரம்
தமிழ்நாட்டில் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் மிகச்சிறப்பாக செயலாற்றினார் செல்வி ஜெ.ஜெயலலிதா.
ஆனால் இன்று தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையை அனுபவித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் என்டிஏ அரசு அமையும்போது பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என பிரதமர் மோடி பேச்சு.
பிரதமரின் தாயார் ஓவியத்தை வரைந்து காட்டிய சிறுமி.
அன்புடன் பெற்றுக்கொள்வதாக உறுதியளித்த பிரதமர் நரேந்திர மோதி
திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபடத் தமிழ்நாடு துடிக்கிறது.
திமுக அரசின் முடிவுரைக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது
– பிரதமர் நரேந்திர மோதி.
பாஜ-தேஜ கூட்டணி ஆட்சியை தமிழ்நாடு விரும்புகிறது- பிரதமர் மோடி பேச்சு
அதிமுக என குறிப்பிடாமல் பாஜ-தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பிரதமர் மோடி பேச்சு
தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பேசிய நிலையில் பாஜக என்டிஏ ஆட்சி என மோடி பேச்சு
தமிழ்நாடு எவ்வளவு வேகமாக வளர்கிறதோ, அவ்வளவு வேகமாக இந்தியாவும் வளரும். கோயில்கள், அறிவியல் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளது தமிழ்நாடு: பிரதமர் மோடி
தமிழ்நாடு மாற்றத்துக்கு தயாராகி உள்ளது என்ற செய்தியை மதுராந்தகத்தில் கூடியுள்ள மக்கள் கடல் உணர்த்துகிறது
இந்தியாவின் கவுரவத்தை உயர்த்தியது தமிழ்நாடு. தமிழ்நாடு எந்த அளவுக்கு வேகமாக வளர்கிறதோ இந்தியாவும் எந்த அளவுக்கு வேகமாக வளரும்
யுபிஏ ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டது
என்டிஏ ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மக்களின் நலனுக்காக மத்திய அரசு ரூ.11 லட்சம் கோடி அளித்திருக்கிறது
வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க இளைஞர்களின் சக்தி மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலத்தை வரும் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும்-பிரதமர் மோடி பேச்சு