கத்தாரில் நடைபெற்ற ‘என்றென்றும் கேப்டன்’ நிகழ்ச்சி
கத்தார் மனிதநேய கலாச்சார பேரவை தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மறைந்த நடிகர் ‘கேப்டன்’ விஜயகாந்தை நினைவுகூரும் வகையில் “என்றென்றும் கேப்டன் என்ற தலைப்பில் பிரம்மாண்டமான கலாச்சார நிகழ்ச்சியை நடத்தினர்.இந்த நிகழ்ச்சியில் 1,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மற்றும் நடிகை ரோஜா செல்வமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், இந்திய தூதரகத்தின் பொறுப்பில் உள்ள டாக்டர் ஸ்ரீ வைபவ் ஏ. தாண்டலே உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் கத்தாரில் உள்ள இந்திய சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
Prev Post
Next Post