ரசிகர்களை வியக்க வைத்த ரச்சிதா ராம்
ரஜினியின் ‘கூலி’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் வியக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியவர் ரச்சிதா ராம்.கன்னட நடிகையான இவர், அங்கு ரசிகர்களால் ‘டிம்பிள் ராணி’ என வர்ணிக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் கூலி படத்தில் வில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் சவுபின் சாக்கிருடன் போட்டி போட்டு நடித்துள்ளார். படம் வெளியான பிறகு யார் இந்த நடிகை என தமிழ் ரசிகர்களை கேள்வி எழுப்ப வைத்துள்ளார். அதோடு பல இயக்குனர்களின் பார்வையும் ரச்சிதா ராம் மீது விழுந்துள்ளது. இதனால் தமிழில் இனி நிறைய படங்களில் இவரை பார்க்கலாம்.
