பத்தா- விமர்சனம்
1986 காலகட்டங்களில் சென்னையில் ரவுடித்தனம் செய்து வரும் விஜய் சேதுபதியை பார்த்தாலே அப்பகுதி சிறுவன் சபரிக்கு பயம் வந்துவிடும். இந்த நிலையில் முழு ஆண்டு பரீச்சை எழுதும் பொழுது தனக்கு பிடித்த விளையாட்டு பொருளை சிறுவன் சபரி வைத்திருக்க, அதை ஆசிரியை பிடுங்கி அவரது அறையில் வைத்து விடுகிறார். பரீசை முடிந்து பள்ளி விடுமுறை விட்ட பிறகு அதை எடுக்க செல்கிறான் சபரி. அப்போது அங்கு கழிவறையில் விஜய் சேதுபதியை பார்த்து பயந்து உள்ளே அவரை வைத்து வெளியில் பூட்டி விடுகிறார். அதோடு தினமும் அவருக்கு பொறை மட்டும் உணவாக கொடுத்துவிட்டு தான் யார் என்பதை சொல்லாமல் எஸ்கேப் ஆகி விடுகிறார். இப்படியாக 8 நாள் கழிவறையிலேயே இருக்கிறார் விஜய் சேதுபதி. அதன் பிறகு என்ன நடந்தது? அவர் வெளியில் வந்தாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதி கதை. விஜய் சேதுபதி தனது நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தை வேறு ஒரு தளத்துக்கு எடுத்து செல்கிறார். கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப ரவுடிக்கும் மனசு இருக்கும் என்பதை சிறுவன் மூலம் உணர்ந்து அவர் வெளிப்படுத்தும் நடிப்பு அற்புதம். அவருக்கு இணையாக மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ் போட்டி போட்டு நடித்துள்ளார். மேலும் அஜய் கோஸ், அர்ஜுன் சிதம்பரம் சாந்தி பாலச்சந்திரன் மற்றும் சிறுவன் சபரி ஆகியோரும் தங்கள் கேரக்டரை சரியாக செய்துள்ளனர். மிகப்பெரிய ரவுடியாக இருந்தாலும் அவருக்கும் மனசு இருக்கு, அவருக்கும் வலிக்கும், குடும்பத்தின் மீது பாசம் இருக்கும் என்பதை ஒரு சின்ன கதை மூலம் அதோடு 1986 காலகட்டங்களில் கதையை சொல்லி அற்புதமாக இயக்கியுள்ளார் இயக்குனர் பாலாஜி தரணிதரன். செல்வகுமாரின் ஒளிப்பதிவு மற்றும் சாய் அபயங்கரின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.
