Take a fresh look at your lifestyle.

டார்க் பட புரொமோ பாடலை பாடிய யுவன்- ஜிவி பிரகாஷ்

1

டார்க் பட புரொமோ பாடலை பாடிய யுவன்- ஜிவி பிரகாஷ்
அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில், அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடித்துள்ள ‘டார்க்’ படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. ‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ரவி சக்தி ஒளிப்பதிவு செய்ய, மனு ரமேசன் இசை அமைக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை தயாரிப்பாளர்கள் ஏ பி வி மாறன், கணேஷ் கே. பாபு, கே.செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் ஒரு பாடலை பாடியுள்ளனர் அந்த பாடலுக்கு எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார்.