Take a fresh look at your lifestyle.

இமயமலை செல்ல நினைத்த நிவேதா பெத்துராஜ்

2

இமயமலை செல்ல நினைத்த நிவேதா பெத்துராஜ்
தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், சமீபத்தில் அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் அண்மையில் வெளியான ‘சிங்கீதம்’ என்ற மியூசிக்கல் பேண்டஸி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, அந்த கேரக்டர் சிறியதாக இருந்தாலும் ரசிகர்களி டையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. தான் 2023ம் ஆண்டு சினிமாவில் இருந்து விலகும் முடிவை எடுத்திருந்தேன், அப்படி நடந்திருந்தால் எனது வாழ்க்கை முற்றிலும் வேறு பாதையில் சென்றிருக்கும். இந்த படம் இல்லையென்றால் நான் இமயமலையில் எங்காவது தியானம் செய்து கொண்டிருப் பேன் என கூறினார்.அடுத்து இயக்குனர் பாபி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளேன். அதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.