சைக்காலஜிக்கல் சர்வைவல் படமாக உருவாகியுள்ள “போட்டோகிராஃபர்”
ஏபிஎஸ் என்டர்டெய்ன் மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.அப்துல் பாசித் தயாரிப்பில், இயக்குநர் அஷ்ரஃப் இயக்கி, நடித்துள்ள படம் “போட்டோகிராஃபர்”. முன்னதாக ‘ரா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்த இவர் ஒரு சிறந்த பைலட் அவார். இதில் இவருக்கு ஜோடியாக ஜனனி நடித்துள்ளார். மனிதனின் பேராசை, கடந்த காலத்தின் ரணங்கள் மற்றும் மர்மங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ‘சைக்காலஜிக்கல் சர்வைவல் மிஸ்டரி திரில்லர்’ படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் கருணாகரன், ஆடுகளம் நரேன், ‘உறியடி’ சிவா, தேவி மகேஷ், ஜே.பி. ஜெய், வேலா ராமமூர்த்தி, நிழல்கள் ரவி மற்றும் வெற்றிவேல் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ரயீஸ் அகமது ஒளிப்பதிவு செய்ய, ராஜ்குமார் சந்திரசேகரன் இசை அமைத்துள்ளார்.
Prev Post
Next Post
