Take a fresh look at your lifestyle.

விஷ்ணு விஷாலுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு

1

விஷ்ணு விஷாலுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கடந்த 3ம் தேதி வெளியான படம் கட்டா குஸ்தி 2. இந்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. படம் வெளியாகி மூன்று நாட்களில் 22 கோடி அளவுக்கு இப்படம் வசூலை குவித்தது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஹீரோ விஷ்ணு விஷாலுக்கு 70 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார். அதோடு இந்த வெற்றிக்கு காரணமான இயக்குனர் செல்லா அய்யாவுக்கு 10 பவுன் மதிப்பில் தங்கச் சங்கிலி மற்றும் பிரேஸ்லெட்டை அணிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த விழாவில் கருணாஸ், முனீஸ் காந்த், ஐஸ்வர்யா லட்சுமி, காளி வெங்கட், இசையமைப்பாளர் சான் ரோல்டன், பாடல் ஆசிரியர் மோகன் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.