Take a fresh look at your lifestyle.

முத்தக் காட்சியா… ஆள விடுங்க: சாய் பல்லவி!!

1

முத்தக் காட்சியா… ஆள விடுங்க: சாய் பல்லவி!!
சினிமாவில் தனக்கென தனி ரூட்டை வைத்திருப்பவர் நடிகை சாய் பல்லவி. கவர்ச்சி கதாபாத்திரங்கள் முத்தக்காட்சி மற்றும் நெருக்கமான சீன்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்,சினிமாவில் ஆரம்பத்தில் இருந்தே நான் முத்த காட்சிக்கு முற்றிலும் எதிரானவள். அது போன்ற காட்சிகளில் நடிப்பதற்கு என் மனசாட்சி அனுமதிக்காது. கடவுளின் அருளால் எனக்கு ஆடம்பரமான வாழ்க்கையும் மகிழ்ச்சியும் கிடைத்துள்ளது. ஆடம்பரத்திற்காக மட்டும் நான் எப்போதும் படங்களில் நடிப்பதில்லை. அதிக பணம் சம்பாதிப்பதற்காக கதாநாயகர்களுடன் முத்த காட்சிகளில் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. வரம்பு மீறிய காதல் காட்சிகளை நடிக்க வேண்டுமானால் வேறு யாரையாவது தேடுங்கள். என்னிடம் வராதீர்கள். அழுத்தமான நடிப்பிற்கு மட்டும் என்னிடம் வாருங்கள் என தடாலடியாக கூறியுள்ளார்.