Take a fresh look at your lifestyle.

ஒரு வழியா ட்ரெயின் கிளம்பிடுச்சு…..

1

ஒரு வழியா ட்ரெயின் கிளம்பிடுச்சு…..
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் டிரெயின். முழுப்படமும் ஓடும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்ட இதில் நாசர், ஸ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் ஆகியோரும் நடித்துள்ளனர். மிஷ்கின் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். நீண்ட நாள்களாக ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்த இப்படம் விரைவில் வெளியாக உள்ளது . இந்த நிலையில், டிரெயின் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 12 ம் தேதி மாலை சென்னையில் நடைபெறவுள்ளதாக புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,மிஷ்கின் இயக்கிய பிசாசு – 2 திரைப்படமும் திரைக்கு வராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது